பாத வலிக்கான தீர்வு ,plantar fascitis remedies
பாத வலி ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் பாதத்துக்கு அடியில் இருக்கக்கூடிய பிளான்டார் ஃபேசியா(plantar fascia) என்று சொல்லக்கூடிய சதையானது நன்கு இறுகி சுருங்கி விரியும் தன்மை குறைவதால் பாத வலி பிரச்சனை ஏற்படுகிறது .இதை கண்டறிவது மிக சுலபமானது. இந்த வலியானது காலையில் தூங்கி எழுந்திருக்கும் பொழுதே நமக்கு பாதத்திலோ பாதத்திற்கு அடியிலோ தாங்க முடியாத ஒரு இழுத்து பிடிப்பது போல அல்லது இறுக்கமாக இருப்பது போல ஒரு வலியை ஏற்படுத்தும். இதை வைத்து ஓரளவு இந்த பிரச்சனையை நாம் கண்டறிய முடியும் .
யாருக்கு பாத வலி ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது
வயது முதிர்ச்சி
உடல் பருமன்
பாதங்களில் அமைப்பு முறை மாறுவதாலும் அதிகப்படியான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதாலும்
இறுக்கமான காலணிகளை அணிவது.
குதித்தல் ,ஓடுதல் போன்ற பாதங்களுக்கு அதிக வேலை இருக்கக்கூடிய பயிற்சிகளை மேற்கொள்வதாலும் இந்த பிளாண்ட்டார் பேசிய பிரச்சனை (plantar fascitis)ஏற்படுகிறது.
பாத வலி பிரச்சனையை வீட்டில் இருந்தபடியே நாம் சரி செய்து கொள்ள முடியும்.
பாதத்திற்கு அடியில் இருக்கக்கூடிய சதையை நல்ல முறையில் நமது விரல்களைக் கொண்டு மசாஜ் செய்து அந்த இறுக்கத்தை ஓரளவு தளர்த்துவது ஒரு நல்ல பலனை கொடுக்கும் .வீட்டிலிருந்தே இதை நாம் செய்து கொள்ளலாம்.
தேவை ஏற்பட்டால் மசாஜ் செய்வதற்கு ஏதேனும் ஒரு எண்ணையை பயன்படுத்தி பாதங்களை நன்கு நமது கையின் கட்டை விரலை கொண்டு பாத முழுவதும் நல்ல முறையில் சுற்றி சுற்றி மசாஜ் செய்து வர நமக்கு நல்ல பலன் கிடைக்கும்.
கணுக்கால் அளவு சுடுதண்ணீரில் தாங்கக்கூடிய அளவு சூடாக உள்ள வெந்நீரில் பாதங்களை வைத்து ஒரு இரண்டு நிமிடம் கழித்து அதே பாதத்திற்கு மசாஜ் செய்தும் வரலாம். அதிக சூடான தண்ணீரை பயன்படுத்த கூடாது. கால் தோல்களில் அதிக சூடான நீரால் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது .
சதைகளை இலகு வாக்ககூடிய சில பயிற்சி முறைகளை தொடர்ந்து செய்து பாத வலியில் இருந்து விடுபடலாம்.
பிசியோதெரபி முறையில் அல்ட்ரா சவுண்ட் தெரப்பி மற்றும் shock wave therapy போன்ற சிகிச்சை முறைகள் உள்ளன , தேவை ஏற்பட்டால் மூன்று அல்லது ஐந்து முறை இந்த பிசியோதெரபி சிகிச்சை முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பாத வலி வராமல் தடுப்பது எப்படி?
கெண்டைக்கால் சதைகள் மற்றும் பாதத்திற்கு அடியில் இருக்கக்கூடிய சதைகள் நன்கு இலகுவாக(flexible) இருப்பதற்கு தேவையான ஸ்ட்ரெச்சிங் எக்ஸர்சைஸ் பயிற்சிகளை(stretching exercises) தெரிந்து கொண்டு அதை தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் பாத வலி வராமல் தடுக்க முடியும்.
இறுக்கமான செருப்பு மற்றும் ஷூ காலணிகளை தவிர்க்க வேண்டும்.
கால்களுக்கு பயிற்சி (exercise)செய்வதற்கு முன்பும் முறையான ஆயத்து நிலை (warm up)பயிற்சிகளை செய்து முடித்துவிட்டு பயிற்சிகளை செய்ய வேண்டும்.
நடைப்பயிற்சி மற்றும் ஓட்ட பயிற்சி மேற்கொள்பவர்கள் இடை இடையே போதிய அளவு ஓய்வெடுத்து கால்கள் மற்றும் கெண்டைக்கால் மற்றும் பாதம் ஆகிய சதைகளுக்கு தளர்த்தும் பயிற்சிகளை (relaxation exercises) செய்து மீண்டும் நடை மற்றும் ஓட்ட பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
யோகம் பிசியோதெரபி
திருச்சி
தொடர்புக்கு 7448329369
Comments
Post a Comment