டென்னிஸ் எல்போ(tennis elbow)

 


டென்னிஸ் எல் போ (tennis elbow)என்பது முழங்கை மூட்டு பகுதியின் வெளிப்பகுதியில் ஏற்படும் வலி டென்னிஸ் எல்போ என்று அறியப்படுகிறது.இதற்கு ஏன் இந்த பெயர் என்று பார்க்கும் போது அதற்கான காரணம் தானாகவே நமக்கு புரிந்துவிடும் .டென்னிஸ் விளையாட்டு வீரர்கள் அதிகமாக மணிக்கட்டு பகுதியை வெளி நோக்கி வீசி மட்டையை பயன்படுத்தி விளையாடும் போது மணிக்கட்டை அசைக்க உதவும் சதை (wrist extensor)முழங்கை பகுதியில் பகுதியில் அதிக விசையின் காரணமாக காயம் ஏற்பட்டு வலியை ஏற்படுத்தும் .

அதிகமாக டென்னிஸ் விளையாடும் வீரர்களுக்கு இந்த வகை காயம் ஏற்பட வாய்ப்புள்ளது எனவே டென்னிஸ் எல்போ என்று அழைக்கப்படுகிறது. எதனால் ஏற்படுகிறது  என்று பார்த்தால் மணிக்கட்டை அசைக்க கூடிய சதையானது முழங்கையில் இருந்து தொடங்குகிறது தொடங்குகிறது எனவே மணிக்கட்டை அதிக விசையுடன் திருப்புவதன் காரணமாக முழங்கை மூட்டு பகுதியில் காயம் (strain)ஏற்பட வாய்ப்புள்ளது இந்த காயம் தொடர்ந்து திரும்பத் திரும்ப செய்யும் பொழுது (repeated starin) குணமடையாமல் இருக்கும் நிலையில் மணிக்கட்டை அசைக்கும் பொழுதோ அல்லது முழங்கையை மடக்கி நீட்டும் பொழுது நமக்கு தாங்க முடியாத வலி ஏற்படும் .பொதுவாக அதிகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கும், வீட்டு வேலை செய்யக்கூடிய பெண்களுக்கும் , கனமான எடை கொண்ட பொருட்களை தூக்குபவர்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது.டென்னிஸ் விளையாடிய டென்னிஸ் விளையாடுபவர்களுக்கும் அல்லது வேறு விளையாட்டு விளையாடக்கூடிய விளையாட்டு வீரர்களுக்கு மட்டும்தான் இந்த பிரச்சனை ஏற்படும் என கருத கூடாது. அதிகமாக ஸ்ட்ரெயின் செய்யக்கூடிய யாருக்கு வேண்டுமானாலும் இந்த டென்னிஸ் எல்போ பிரச்சனை ஏற்படலாம்.

டென்னிஸ் எல்போ பிரச்சனை குணம் அடைய என்ன செய்ய வேண்டும்?

பாதிக்கப்பட்ட முழங்கை மூட்டு பகுதியில் சதை துவங்கும் இடத்தில் ஐஸ் பாக் (ice pack)கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஐஸ் ஒட்டகம் கொடுக்கும் பொழுது அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய காயத்தின் வீரியம்(inflammation) குறையும், இதனால் வலியானது நன்கு குறையும்.


மணிக்கட்டை அசைக்கும் சதைப்பகுதியில் அதிக விசை ஏற்படாத மாதிரியான வேலைகளை மட்டும் குணம் அடையும் வரை செய்து வர வேண்டும் .

அதிக எடை கொண்ட பொருட்களை தூக்குவதை தவிர்க்க வேண்டும்.

காயம் ஏற்பட்ட(strain) சதை அதிகமாக வேலை செய்வதை குறைப்பதற்கு இந்த சதைப்பகுதியை சப்போர்ட் செய்யக்கூடிய பிரேஸ்(tennis elbow brace)  பயன்படுத்தி சதை அதிக காயம் (strain ) ஏற்படாதவாறு நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.


தாங்க முடியாத வலி இருக்கும் பட்சத்தில் தேவை ஏற்பட்டால் அருகில் உள்ள எலும்பு மூட்டு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று அவர் பரிந்துரைக்கும் வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்தலாம்.

பிசியோதெரபி சிகிச்சை நிபுணரை தொடர்பு கொண்டு தேவை ஏற்பட்டால் அல்ட்ரா சவுண்ட் நிரப்பி எடுத்துக் கொள்ளலாம்.

டென்னிஸ் எல்போ பிரச்சனை ஏற்படாமல் தடுக்கக்கூடிய பயிற்சி முறைகளை தெரிந்து கொண்டு தொடர்ந்து செய்து வர இந்த பிரச்சனை நாளடைவில் குணமடையும்.

விளையாட்டு வீரர்கள் விளையாட்டிற்கு முன் செய்யக்கூடிய ஆயத்த நிலை(warm up)முறையாக செய்து சதைகளை நன்கு தயார் நிலையில் வைத்து விளையாட்டை தொடங்கும் பொழுது இது மாதிரியான ஸ்ட்ரைன் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.




Comments

Popular posts from this blog

மணிக்கட்டிலிருந்து கட்டைவிரல் வரை வலி குணமடைய

பக்கவாதம் வராமல் தடுப்பது எப்படி?