பக்கவாதம் வராமல் தடுப்பது எப்படி?
பக்கவாதம் என்பது மூளைக்கு செல்லக்கூடிய ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால் உடலில் ஒரு பகுதி கை ,கால் மற்றும் உடல் பகுதிகள் செயல்படாமல் செயலிழந்து போவது பக்கவாதம் இன்று அறியப்படுகிறது. இந்த பக்கவாதம் ஏற்படாமல் தடுப்பதற்கு நமது அன்றாட வாழ்க்கை முறையில் நாம் முக்கியமாக ஐந்து விஷயங்களை தவறாது கவனத்தில் கொண்டு அதை முறையாக பின்பற்றி வரும் பொழுது நமக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான அபாயம் மிக மிக குறைவு. பக்கவாதம் வராமல் 5 விஷயங்கள் என்ன என்று நாம் இப்பொழுது தெரிந்து கொள்வோம்.
1)ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்கள்
நாம் உண்ணக்கூடிய உணவு என்பது மிக மிக முக்கியமான ஒன்று நாம் பெரும்பாலும் உணவு உண்ணும் பொழுது அது உடலுக்கு நல்லதா ஆரோக்கியமானதா என்று சிந்திப்பது இல்லை .நமக்கு சுவைக்கு நன்றாக உள்ளதா என்பதை மட்டுமே பார்த்து உண்ணும் பழக்கம் தற்பொழுது மிக மிக அதிகமாக உள்ளது. இது முற்றிலும் தவறான ஒரு விஷயம், உண்ணக்கூடிய உணவு ஆரோக்கியமானதா என்பதை நாம் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும் .ஏனெனில் இதை ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம், நாம் பயன்படுத்தும் இருசக்கர வாகனத்தில் நாம் எந்த மாதிரியான தூய்மையான எரிபொருள் பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து அந்த இரு சக்கர வாகனத்தில் உள்ள இன்ஜினின் திறன் நிர்ணயிக்கப்படுகிறது. அது போல தான் நமது உடலும் அன்றாடம் ஒரு இயந்திரம் போல் செயல்படுகிறது இந்த உடல் என்னும் இயந்திரம் நல்ல நிலையில் இயங்க நாம் நல்ல உணவுகளையே எரிபொருளாக உள்ளே வழங்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.நொறுக்கு தீனிகள், துரித உணவுகள், காலம் கடந்து உண்ணக்கூடிய உணவுகள், பழைய உணவுகள், இவற்றை தவிர்க்க வேண்டும்.அதிகமான மாமிச உணவுகளை நாம் சேர்த்துக் கொள்வதும் மிக மிக தவறு.இதனால் அளவுக்கு அதிகமான கொழுப்பு நமது ரத்த நாளங்களில் படிந்து ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது மேலும் நமது உழைப்பை பொறுத்து நாம் உணவை தேர்ந்தெடுப்பது மிக மிக நல்லது.
2) உடற்பயிற்சி
உடற்பயிற்சி தொடர்ந்து செய்வதை நாம் அன்றாட வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாக மாற்றிக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி மூலம் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது .அத்துடன் உடற்பயிற்சியை தொடர்ந்து செய்வதால் உடலில் உள்ள கழிவுகள் அதிக அளவில் வெளியேற்றப்படுகிறது .எனவே உடல் எப்பொழுதும் ஆரோக்கியமாகவும் புத்துணர்வுடனும் விளங்குகிறது .உடலில் சேரக்கூடிய தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்றக் கூடிய ஆற்றல் உடற்பயிற்சிக்கு அதிகம் உள்ளது .எனவே பக்கவாதம் வராமல் தடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் உடற்பயிற்சியை ஒரு தினசரி பழக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி தொடர்ந்து செய்யும் பொழுது. நமது மனமும் மகிழ்ச்சியுடன் விளங்குகிறது உடற்பயிற்சியை நாம் தொடர்ந்து செய்வதால் உடலில் உள்ள அனைத்து மூட்டுகளும் சதைகளும் ,ஜவ்வுகளும் ஆரோக்கியமாக இருப்பதுடன் உள்ளுறுப்புகளும் மிகவும் ஆரோக்கியத்துடன் செயல்படுவதாக ஆராய்ச்சிகள் தெளிவுபடுத்தியுள்ளன.எனவே உடற்பயிற்சியை நாம் அன்றாட வாழ்வில் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
3)மன அழுத்தத்தில் இருந்து விலகி இறுத்தல்
நமது வாழ்க்கையில் நாம் மன அழுத்தத்தில் இருந்து எவ்வளவு தூரம் விலகி இருக்கிறோம் என்பதை நாம் ஒவ்வொரு தினமும் சிந்தித்து மன அழுத்தம் நம்மளை நெருங்காதவாறு நமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும் .மன அழுத்தம் நமது மனதில் ஏற்படும் பொழுது அது உடல் ஆரோக்கியத்தையும் வெகுவாக பாதிக்கிறது. இந்த மன அழுத்தமானது படிப்படியாக நமது அன்றாட செயல்பாடுகளை குறைப்பதுடன் நமது அனைத்து வாழ்க்கை முறை,உணவு பழக்க வழக்கம் ,சமுதாயத்தில் நமது கடமைகள், குடும்பத்தில் நமது கடமைகள் என்று படிப்படியாக நமது அன்றாட கடமைகளில் இருந்தும் நம்மளை பாதித்து, ஆரோக்கியமாக மனிதனாய் வாழவிடாமல் செய்துவிடுகிறது. எனவே மன அழுத்தம் நம்மை நெருங்காத வகையில் நமது வாழ்க்கையை வாழ பழகிக் கொள்ள வேண்டும் .அன்றாடம் எளிமையான சிறு சிறு உடற்பயிற்சிகளை செய்வதன் மூலமும் தியானம் யோகா போன்ற பயிற்சிகளை செய்வதன் மூலமும் மன அழுத்தத்திலிருந்து ஓரளவு விலகி இருக்க முடியும் .முறையாக உறங்கும் பழக்கத்தை நாம் ஏற்படுத்திக் கொள்வதன் மூலமாக மன அழுத்தத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.ஏனெனில் போதுமான அளவு உறக்கம் இல்லை எனில் மன சோர்வு ஏற்பட்டு அதனால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.போதுமான அளவு உறக்கமின்மை உடல் ஆரோக்கியத்தையும் மெதுவாக பாதிக்கக்கூடும் எனவே மன அழுத்தம் உள்ளவர்கள் முதலில் போதுமான அளவு உறக்கம் நமக்கு கிடைக்கிறதா என்பதை நன்கு சிந்தித்து போதுமான அளவு உறக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வழிவகை செய்து கொள்ள வேண்டும். அதிக அளவு உறக்கமும் நல்லது அல்ல எனவே அளவான உறக்கத்தை பெறும் வழிமுறைகளை தெரிந்து கொண்டு உறங்கும் பழக்கத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி மன அழுத்தம் வராமலும் தடுத்துக் கொள்ளலாம்.
4)தீய பழக்கங்களை தவிர்த்தல்
புகை பிடித்தல் மது அருந்துதல் இன்னும் சில லாகிறி வஸ்துகளை பயன்படுத்துவது போன்ற தீய பழக்கவழக்கங்களை தவிர்க்க வேண்டும். புகை பிடித்தல் ,மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்கள் படிப்படியாக ஒரு மனிதனின் உடல் ஆரோக்கியத்தை கெடுப்பதுடன் அவனது மன ஆரோக்கியத்தையும் வெகுவாக பாதிக்கிறது. இதனால் நம்மை அறியாமலே நமது உடல் ஆரோக்கியம் படிப்படியாக பாதிக்கப்பட்டு பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும். மாரடைப்பு பக்கவாதம் இன்னும் பல உடல் நோய்கள் மற்றும் உடலில் ஏற்படும் பாதிப்புகளான முக்கியமாக புற்றுநோய் இவையெல்லாம் தீய பழக்கங்களினால் தான் ஏற்படுகிறது என்று பல ஆராய்ச்சி கட்டுரைகள் வெளிவந்துள்ளன. மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற பழக்கங்கள் பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணிகளில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது .எனவே இது போன்ற தீய பழக்க வழக்கங்கள் நமது வாழ்க்கையில் இருந்தால் அதனை தவிர்த்து விட்டு நாம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்க நாம் உடனடியாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது .எனவே பக்கவாதம் வராமல் தடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் இந்த தீய பழக்கங்களை கைவிட வேண்டும்.
5)சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம்
ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் நமக்கு சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் நோய் இருக்கிறதா என்பதை பரிசோதித்து தெரிந்து கொள்ள வேண்டும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் சிறு வயதில் இந்த பிரச்சனைகள் தொடங்கி விடுவது மிகவும் வேதனைக்குரிய ஒரே விஷயமாகவும், இதற்கெல்லாம் மிக முக்கிய காரணம் நமது வாழ்க்கையின் வாழ்வியல் முறை மாற்றமே என்பதை நாம் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். இத்தகைய வாழ்வியல் முறையில் நமக்கு இந்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோய் வராமல் தடுப்பது மிக மிக முக்கியமாகும். அவ்வாறு எதிர்பாராத விதமாகவோ அல்லது நமது பழக்க வழக்கங்கள் காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தினாலோ நமக்கு இந்த சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் ஏற்பட்டால் அதனை நாம் தொடக்க நிலையிலே கண்டறிந்து அதனை கட்டுப்பாட்டுக்குள் எப்படி வைத்துக் கொள்வது என்பதை நாம் முறையாக கடைபிடித்து வாழும் போது இந்த சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் .மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் தடுக்கவும் முடியும் .ஆனால் சிலர் இந்த சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்த பிரச்சனைகள் குறித்து பெரிதாக எடுத்துக் கொள்ளாதது மிகப்பெரிய அலட்சியமான மனப்பான்மை. மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. மேலும் மேற்கண்ட நான்கு முறைகளை முறையாக பின்பற்றும் பொழுது நமக்கு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் ஏற்படாமல் நம்மால் முடிந்தவரை தவிர்க்க முடியும்.இருந்தும் நமக்கு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் நம் உடலில் ஏதேனும் ஒரு காரணத்தால் ஏற்பட்டு விட்டால் அதனை கண்டு நாம் பயப்பட வேண்டியது அவசியம் இல்லை சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் எதனால் ஏற்பட்டது என்பதை முதலில் நாம் சிந்தித்து அந்த காரணிகளை களைவதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறே சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணியை கண்டறிந்து அதை முறைப்படுத்தினாலே சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் தானாக ஓரளவு கட்டுக்குள் வந்துவிடும் மேலும் அது தொடர்பான மருத்துவ நிபுணரை அணுகி அதற்கு உண்டான சிகிச்சைகளை ஆரம்ப கட்டத்தில் எடுத்து ,தொடர்ந்து கண்காணித்து அதனை கட்டுக்குள் வைப்பதன் மூலம் நாம் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தால் மேலும் மேலும் பாதிப்படையாமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் பக்கவாதம் வராமலும் தடுத்துக் கொள்ள முடியும்.
நன்றி
யோகம் பிசியோதெரபி
திருச்சி
தொடர்புக்கு -7448328369
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)


.jpeg)
Comments
Post a Comment