மணிக்கட்டிலிருந்து கட்டைவிரல் வரை வலி குணமடைய
கையில் உள்ள கட்டைவிரலில் வலி ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் கட்டைவிரலை தூக்கும் சதையானது அதிக விசையின் காரணமாக strain ஏற்படுவதால் கை கட்டை விரல் சதை இறுகி வலி ஏற்படுகிறது. இது மிகவும் எளிமையான முறையில் தீர்க்க கூடிய ஒரு பிரச்சனை ஆனால் இதனை நாம் ஆரம்பத்திலேயே கண்டறிவது கிடையாது. அதிக நாட்கள் கவனிக்காமல் விடுவதனால் கட்டைவிரலை அசைக்க முடியாமலும் மணிக்கட்டை அசைக்க முடியாமலும் அதிக வலியின் காரணமாக துன்பத்திற்கு ஆளாக நேரிடுகிறது.கைவிரல்களை தரையில் ஊனி அமரும் பொழுதோ அல்லது கை விரல்களை தரையில் ஊனி எழுந்திருக்கும் பொழுதோ கையில் உள்ள கட்டை விரல் அழுத்தமாக மடங்குவதால் கட்டை விரலை தூக்கக் கூடிய சதை strain ஏற்படும் அல்லது கட்டைவிரலை அதிகமாக பயன்படுத்தி செய்யக்கூடிய பணியில் நாம் இருக்கும் பொழுதும் இந்த கட்டைவிரலை தூக்கக்கூடிய சதை strain ஆவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
இதனை சரி செய்வதற்கு முதலில் நாம் செய்ய வேண்டியது கட்டை விரல் பகுதியில் அதை தூக்கக் கூடிய சதை இருக்கும் பகுதியான முழங்கைப் பகுதியுடன் சேர்த்து ஐஸ் ஒத்தடம் கொடுக்க வேண்டும் . எளிமையான முறையில் மசாஜ் செய்து அந்த சதையினை தளர்த்திக் கொள்ளலாம்.
மேலும் இந்த பிரச்சனை இருந்தால் பிசியோதெரபி முறையில் இதனை மிக எளிய முறையில் சரி செய்து விடலாம் பிசியோதெரபி முறையில் செய்யப்படும் அல்ட்ரா சவுண்ட் தெரபி(ultrasound therapy) இதற்கு நல்ல தீர்வளிக்கும்.பிரச்சனையின் கால அளவை பொறுத்து எத்தனை முறை அல்ட்ரா சவுண்ட் தெரப்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை தீர்மானித்து முறையாக அதை சிகிச்சை மேற்கொள்ளும் போது கட்டைவலி விரலில் இருந்து விடுபடலாம்.

Comments
Post a Comment