முகவாதம் ஏன் ஏற்படுகிறது? மழை மற்றும் குளிர்காலங்களில் முகவாதம் வராமல் தடுப்பது எப்படி?

 முகவாதம் என்பது முகத்தில் உள்ள சதைகளுக்கு தூண்டுதலை எடுத்து வரும் (Facial Nerve)நரம்பு செயலிழந்து அந்த நரம்புடன் தொடர்புடைய சதைகள் செயலிழந்து முகமானது, பாதிக்கப்பட்ட பகுதிக்கு எதிர் புறம் சதைகள் இழுத்து கோணலாக இருப்பது முகவாதம் என்று அறியப்படுகிறது. இந்த முகவாதமானது பனிக்காலங்களிலும் மழைக்காலங்களிலும் பெரும்பாலும் அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடிய ஒரு பிரச்சனை .பொதுவாக பணி மற்றும் மழைக்காலங்களில் நமது காது பகுதியில் உள்ள ஜவ்வுகள் தொற்று காரணமாகவோ அல்லது அதிகப்படியான குளிர்ச்சி காரணமாகவோ தடித்து வீங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது .இவ்வாறு தடுத்து வீங்கிய ஜவ்வானது காது பகுதியில் உள்ள காது வழியாக வரக்கூடிய அந்த Facial nervr ஐ அழுத்தும் பொழுது முகவாதம் ஏற்பட்டு விடுகிறது.



 இதனை எவ்வாறு தடுக்கலாம்?
குறிப்பாக மழை மற்றும் பணி காலங்களில் நாம் நமது காது பகுதி நன்றாக மூடி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் .சூடான பானங்களை பருகலாம். குளிர்ச்சியான பானங்களையும் குளிர்ந்த நீரையும் பருகுவதை தவிர்க்க வேண்டும். மழை மற்றும் பனிக்காலங்களில் அடிக்கடி குளிர்ந்த நீரில் தலைக்கு குளிப்பதை தவிர்ப்பது நல்லது.தேவை எனில் சுடுநீர் கொண்டு தலை குளிக்கலாம் அவ்வாறு தலை குளித்தாலும் முடியை நன்கு உலர்த்தி விட வேண்டும். தலை ஈரமாக அதிக நேரம் இருப்பதாலும் காது பகுதியில் உள்ள ஜவ்வுகள் குளிர்ச்சி ஏற்பட்டு வீங்கி முகவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.பொதுவாக மழை மற்றும் பனிக்காலங்களில் கார்த்திகை மார்கழி போன்ற மாதங்களில் பெண்கள் அதிகாலையில் எழுந்து கோலம் போடுவதற்கும் வாசல் தெளிப்பதற்கும் முற்படுவர்.அந்த வேலையை செய்யும் பொழுது காதுகளை நன்றாக மூடிக் கொள்ள வேண்டும். தலையை நன்கு கம்பளி ஸ்கார்ஃப் அணிந்து அந்த பணிகளை செய்யலாம் .தொலைதூரம் பயணம் செய்பவர்கள் கூட குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் தலையில் தலை மற்றும் காது நன்கு தலைகவசம் கொண்டு  மூடி பயணம் செய்யலாம். மாலை வேளைகளில் கூடான மூலிகை சாறுகள் மற்றும் சூடான கஞ்சி வகைகள் பருகலாம் .
தூங்கும் பொழுது தரை விரிப்பு உடலுக்கு ஓரளவு உஷ்ணத்தை தரக்கூடிய கம்பளி இருப்பு அல்லது மொத்தமான போர்வை விரிப்புகளை பயன்படுத்தி நாம் உறங்கலாம். பனிக்காலங்களில் பெரும் தரையில் உறங்குவதை தவிர்க்க வேண்டும்.
 ஏசி போன்ற குளிர்சாதன பொருட்களை பனிக்காலங்களில் தவிர்ப்பது நல்லது தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் ஏசி அறையில் பணி புரிபவர்கள் ஏசியின் தட்பவெட்ப நிலையை அதிகமாக வைத்து பயன்படுத்தவது நல்லது. முடிந்தவரை ஏசிக்கு அருகில் அமர்ந்து வேலை செய்யாமல் தொலைவில் அமர்ந்து வேலை செய்வது நல்லது.
மழை மற்றும் பனிக்காலங்களில் நமக்கு மூக்கடைப்பு சளி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு இதனாலும் முகவாதம் ஏற்படலாம் அவ்வாறு மூக்கடைப்பு சளி தொந்தரவு ஏற்படும் பட்சத்தில் இரண்டு வேலைகள் மூலிகைகளைக் கொண்டு ஆவி பிடித்து மூக்கடைப்பு சளி தொந்தரவுகளை கட்டுக்குள் வைப்பதன் மூலமும் முகவாதம் வராமல் தடுக்க முடியும்.
முகவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குகண் இமையில் உள்ள தசைகள் செயல் குறைவதால் ஒரு பக்க கண்ணை மூட முடியாத நிலை ஏற்படும் .அப்பொழுது அந்த கண்களில் இருந்து தொடர்ந்து நீர் வெளியேறிக் கொண்டே இருக்கும் பயணம் செய்யும்பொழுது, வெளிப்புறங்களுக்கு செல்லும் பொழுது அந்த கண்களில் தேவையில்லாமல் காற்றுமற்றும் புழுதி அழுக்கு ஏதும் படாமல் தடுக்க நான் முகவாதம் குணமாகும் வரை அந்த கண்களை பாதுகாப்பாக முறையில் வை க்க நன்கு மூடும் வகையான கண்ணாடிகளை அணிவது நல்லது ஏனெனில் கண்கள் மேலும் பாதிப்படையாமலோ அல்லது ஏதேனும் கண் தொற்று ஏற்படாமலோ தவிர்ப்பது மிக முக்கியம்.

Comments

Popular posts from this blog

மணிக்கட்டிலிருந்து கட்டைவிரல் வரை வலி குணமடைய

டென்னிஸ் எல்போ(tennis elbow)

பக்கவாதம் வராமல் தடுப்பது எப்படி?