மூட்டுவலிக்கான காரணம் என்ன?எவ்வாறு தடுப்பது
வயது முதிர்வு,
பாலின வேறுபாடு
ஒபிசிட்டி என்று சொல்லக்கூடிய உடல் பருமன்
மூட்டில் ஏற்படக்கூடிய காயங்கள்
மூட்டில் ஏற்படக்கூடிய கிருமி தொற்றுதல்கள்
பரம்பரை பரம்பரையாக சிலருக்கு மூட்டுகளின் தன்மையை பொறுத்து ஏற்படக்கூடிய பாதிப்புகள்
பிறவியிலிருந்து ஏற்படக்கூடிய எலும்பு மற்றும் மூட்டு குறைபாடுகள்
சர்க்கரை வியாதி
யூரிக் ஆசிட் போன்ற உப்புகள் அதிக அளவில் மூட்டுகளில் படிமானம் ஏற்பட்டு மூட்டுகளை பாதிப்பு ஏற்படுத்துவது
ருமேட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ்
மூட்டுகளை பாதுகாப்பற்ற முறையில் தொடர்ந்து பயன்படுத்துவது(repeated stress injury)
போன்ற காரணங்களாலும் மூட்டுகளில் அசைவுகள் குறைந்து மூட்டு பாதிப்புகள் மற்றும் வலி ஏற்படலாம் பொதுவாக இந்த காரணிகள் என்பது உடலில் எந்த மூட்டுகளையும் பாதிக்கும் பொதுவான காரணிகள் என்று பார்த்தாலும் , அதிக அளவில் நமது உடலில் முழங்கால் மூட்டு எலும்பு, இடுப்பு எலும்பு முட்டு, தோள்பட்டை மூட்டு என இந்த மூன்று மூட்டுகளும் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது இதிலும் முழங்கால் மூட்டு மிக மிக அதிக அளவு பாதிப்புக்கு உள்ளாகி தேய்மானம் ஏற்பட்டு நமது நடை மற்றும் செயல்பாடுகள் மிகவும் குறைந்து எங்கும் வெளியில் செல்ல முடியாமல் ஒரே இடத்தில் முடங்கி இருக்கக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டு விடுகிறது .ஏனெனில் மூட்டு பாதிப்புகள் ஏற்படும் போது வலி என்பது மிக மிக அதிகமாக இருக்கக்கூடிய ஒரு காரணம் தான் நம்மால் முழங்கல் மூட்டுகளை எளிதாக அசைக்கவும் நடக்கவும் முடியாமல், நமது அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் நாம் மிகவும் கஷ்டப்பட்டு நாம் வாழ்க்கையை நமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மிகவும் சிரமமான சூழ்நிலையில் தள்ளப்படுகிறோம்.
மூட்டு வலி மற்றும் மூட்டு பாதிப்பு வராமல் தடுப்பது எப்படி?
மூட்டு வலி ஏற்படும் பொழுது மூட்டு வலி எதனால் ஏற்படுகிறது என்பதை முதலில் கண்டறிய வேண்டும் .தெளிவாக பரிசோதனை செய்து தெரிந்து கொண்ட பிறகு அதற்கு தகுந்த சிகிச்சைகளை நாம் தெளிவாக ஒரு புரிதலுடன் மேற்கொள்ள முடியும். அவ்வாறு மூட்டு வலி நமக்கு ஏற்படும் போது எக்ஸ்ரே ,ஸ்கேன் மற்றும் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து மூட்டு வலிக்கான காரணங்களை நாம் அறிந்து கொள்ள முடியும் மேலும் மூட்டுகளை அசைத்து பார்த்தும் அதன் செயல்பாடுகளை பரிசோதனை செய்தும் மூட்டு பாதிப்புகளை நாம் கண்டறிய முடியும் இவ்வாறு நாம் மூட்டு வலி மற்றும் மூட்டு பாதிப்புக்கான காரணிகளை கண்டறிந்த உடன் அதற்கு செய்ய வேண்டிய சிகிச்சைகள் என்று பார்க்கும் பொழுது பிசியோதெரபி சிகிச்சை என்பது ஒரு முக்கியமான சிகிச்சை முறையாக இன்று வளர்ந்துள்ளது பிசியோதெரபி சிகிச்சையில் மூட்டு பாதிப்பு ஏற்பட்டு மூட்டு வலியின் காரணமாக அவதிப்படுபவர்களுக்கு எந்த மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது என்று பார்த்தோமானால் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் எடையை குறைப்பதற்கான பயிற்சிகள்
மூட்டை சுற்றியுள்ள சதைகள் வலுவாக கூடிய பயிற்சிகள்
என்று நாம் பிரித்துக் கொள்ள வேண்டும் அவ்வாறு சொல்லித் தரக்கூடிய எக்சர்சைஸ் பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன் மூலம் நமக்கு நாளடைவில் மிகவும் ஒரு நல்ல பலனை அடைய முடியும். இதைத் தவிர அதிகமான வலி இருக்கும் சூழ்நிலைகளில் தேவைப்பட்டால் மூட்டை சுற்றி இருக்கக்கூடிய சதைகளையும் ஜவ்வுகளையும் தளர்த்த கூடிய வேக்ஸ், மற்றும் மின் உபகரணங்களைக் கொண்டு செய்யக்கூடிய மின் தூண்டுதல் சிகிச்சைகளும் ஆரம்ப கட்டத்தில் அதாவது தொடக்க நிலை சிகிச்சையில் நல்ல பலன்களை தரும் வலி ஓரளவு குறைந்த பின்பு நிரந்தரமாக நமக்கு வழி வராமல் தடுப்பதற்கும் மேலும் மூட்டுகள் தேயாமல் தடுப்பதற்கும் நாம் தொடர்ந்து செய்ய வேண்டியது பயிற்சி முறைகள் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் இந்த பயிற்சி முறைகள் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும் .ஒவ்வொருவருக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு தகுந்தால் போல் பயற்சிகள் மாறுபடும். ஒரே பயிற்சி அனைவருக்கும் பலன் அளிக்குமா என்பது உறுதியாக சொல்ல முடியாது நமக்கு தேவையான பயிற்சிகளை தகுந்த பிசியோதெரபி நிபுணரிடம் சென்று பயின்று தகுந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் மூட்டு வலி வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

Comments
Post a Comment