Posts

மணிக்கட்டிலிருந்து கட்டைவிரல் வரை வலி குணமடைய

Image
 கையில் உள்ள கட்டைவிரலில் வலி ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் கட்டைவிரலை தூக்கும் சதையானது அதிக விசையின் காரணமாக strain ஏற்படுவதால் கை கட்டை விரல் சதை இறுகி வலி ஏற்படுகிறது. இது மிகவும் எளிமையான முறையில் தீர்க்க கூடிய ஒரு பிரச்சனை ஆனால் இதனை நாம் ஆரம்பத்திலேயே கண்டறிவது கிடையாது. அதிக நாட்கள் கவனிக்காமல் விடுவதனால் கட்டைவிரலை அசைக்க முடியாமலும் மணிக்கட்டை அசைக்க முடியாமலும் அதிக வலியின் காரணமாக துன்பத்திற்கு ஆளாக நேரிடுகிறது.கைவிரல்களை தரையில் ஊனி அமரும் பொழுதோ அல்லது கை விரல்களை தரையில் ஊனி எழுந்திருக்கும் பொழுதோ கையில் உள்ள கட்டை விரல் அழுத்தமாக மடங்குவதால் கட்டை விரலை தூக்கக் கூடிய சதை strain ஏற்படும் அல்லது கட்டைவிரலை அதிகமாக பயன்படுத்தி செய்யக்கூடிய பணியில் நாம் இருக்கும் பொழுதும் இந்த கட்டைவிரலை தூக்கக்கூடிய சதை strain ஆவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.  இதனை சரி செய்வதற்கு முதலில் நாம் செய்ய வேண்டியது கட்டை விரல் பகுதியில் அதை தூக்கக் கூடிய சதை இருக்கும் பகுதியான முழங்கைப் பகுதியுடன் சேர்த்து ஐஸ் ஒத்தடம் கொடுக்க வேண்டும் . எளிமையான முறையில் மசாஜ் செய்து அந்த சதையினை தளர்த்தி...

பாத வலிக்கான தீர்வு ,plantar fascitis remedies

Image
பாத வலி ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் பாதத்துக்கு அடியில் இருக்கக்கூடிய பிளான்டார் ஃபேசியா(plantar fascia) என்று சொல்லக்கூடிய சதையானது நன்கு இறுகி சுருங்கி விரியும் தன்மை குறைவதால் பாத வலி பிரச்சனை ஏற்படுகிறது .இதை கண்டறிவது மிக சுலபமானது. இந்த வலியானது காலையில் தூங்கி எழுந்திருக்கும் பொழுதே நமக்கு பாதத்திலோ பாதத்திற்கு அடியிலோ தாங்க முடியாத ஒரு இழுத்து பிடிப்பது போல அல்லது இறுக்கமாக இருப்பது போல ஒரு வலியை ஏற்படுத்தும். இதை வைத்து ஓரளவு இந்த பிரச்சனையை நாம் கண்டறிய முடியும் . யாருக்கு பாத வலி ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது   வயது முதிர்ச்சி  உடல் பருமன்  பாதங்களில் அமைப்பு முறை மாறுவதாலும் அதிகப்படியான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதாலும்  இறுக்கமான காலணிகளை அணிவது. குதித்தல் ,ஓடுதல் போன்ற பாதங்களுக்கு அதிக வேலை இருக்கக்கூடிய பயிற்சிகளை மேற்கொள்வதாலும் இந்த பிளாண்ட்டார் பேசிய பிரச்சனை (plantar fascitis)ஏற்படுகிறது.   பாத வலி பிரச்சனையை வீட்டில் இருந்தபடியே நாம் சரி செய்து கொள்ள முடியும். பாதத்திற்கு அடியில் இருக்கக்கூடிய சதையை நல்ல முறையில் நமது விரல்...

பக்கவாதம் வராமல் தடுப்பது எப்படி?

Image
           பக்கவாதம் என்பது மூளைக்கு செல்லக்கூடிய ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால் உடலில் ஒரு பகுதி கை ,கால் மற்றும் உடல் பகுதிகள் செயல்படாமல் செயலிழந்து போவது பக்கவாதம் இன்று அறியப்படுகிறது. இந்த பக்கவாதம் ஏற்படாமல் தடுப்பதற்கு நமது அன்றாட வாழ்க்கை முறையில் நாம் முக்கியமாக ஐந்து விஷயங்களை தவறாது கவனத்தில் கொண்டு அதை முறையாக பின்பற்றி வரும் பொழுது நமக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான அபாயம் மிக மிக குறைவு. பக்கவாதம் வராமல் 5 விஷயங்கள் என்ன என்று நாம் இப்பொழுது தெரிந்து கொள்வோம். 1)ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்கள்          நாம் உண்ணக்கூடிய உணவு என்பது மிக மிக முக்கியமான ஒன்று நாம் பெரும்பாலும் உணவு உண்ணும் பொழுது அது உடலுக்கு நல்லதா ஆரோக்கியமானதா என்று சிந்திப்பது இல்லை .நமக்கு சுவைக்கு நன்றாக உள்ளதா என்பதை மட்டுமே பார்த்து உண்ணும் பழக்கம் தற்பொழுது மிக மிக அதிகமாக உள்ளது. இது முற்றிலும் தவறான ஒரு விஷயம், உண்ணக்கூடிய உணவு ஆரோக்கியமானதா என்பதை நாம் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும் .ஏனெனில் இதை ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம், ந...

டென்னிஸ் எல்போ(tennis elbow)

Image
  டென்னிஸ் எல் போ (tennis elbow)என்பது முழங்கை மூட்டு பகுதியின் வெளிப்பகுதியில் ஏற்படும் வலி டென்னிஸ் எல்போ என்று அறியப்படுகிறது.இதற்கு ஏன் இந்த பெயர் என்று பார்க்கும் போது அதற்கான காரணம் தானாகவே நமக்கு புரிந்துவிடும் .டென்னிஸ் விளையாட்டு வீரர்கள் அதிகமாக மணிக்கட்டு பகுதியை வெளி நோக்கி வீசி மட்டையை பயன்படுத்தி விளையாடும் போது மணிக்கட்டை அசைக்க உதவும் சதை (wrist extensor)முழங்கை பகுதியில் பகுதியில் அதிக விசையின் காரணமாக காயம் ஏற்பட்டு வலியை ஏற்படுத்தும் . அதிகமாக டென்னிஸ் விளையாடும் வீரர்களுக்கு இந்த வகை காயம் ஏற்பட வாய்ப்புள்ளது எனவே டென்னிஸ் எல்போ என்று அழைக்கப்படுகிறது. எதனால் ஏற்படுகிறது  என்று பார்த்தால் மணிக்கட்டை அசைக்க கூடிய சதையானது முழங்கையில் இருந்து தொடங்குகிறது தொடங்குகிறது எனவே மணிக்கட்டை அதிக விசையுடன் திருப்புவதன் காரணமாக முழங்கை மூட்டு பகுதியில் காயம் (strain)ஏற்பட வாய்ப்புள்ளது இந்த காயம் தொடர்ந்து திரும்பத் திரும்ப செய்யும் பொழுது (repeated starin) குணமடையாமல் இருக்கும் நிலையில் மணிக்கட்டை அசைக்கும் பொழுதோ அல்லது முழங்கையை மடக்கி நீட்டும் பொழுது நமக்கு தாங்க ...

மூட்டுவலிக்கான காரணம் என்ன?எவ்வாறு தடுப்பது

Image
நமது உடலில் மூட்டுகள் என்று எதை கூறுகிறோம் என்றால் இரண்டு அல்லது மூன்று எலும்புகளின் முனைப்பகுதிகள் சந்திக்கும் இடமே மூட்டு எனப்படுகிறது. நமது உடலின் அசைவுக்கு மூட்டுகள் மிக முக்கியமான ஒரு அமைப்பு ஆகும். உடல் அசைவு நல்ல முறையில் இருந்தால்தான் உடல் ஆரோக்கியம் நல்ல முறையில் இருக்கும் .அப்பொழுதுதான் உடல் ஆரோக்கியம் நன்கு பராமரிக்கப்பட முடியும் அப்படி எனில் உடலில் உள்ள மூட்டுகள் நல்ல ஆரோக்கியமான நிலையில் இருக்க வேண்டும் .உடலில் பல வகையான  மூட்டுகள் உள்ளன .தோள்பட்டையில் மூட்டுகள் ,முழங்கை மூட்டுகள், மணிக்கட்டு மூட்டுகள் , விரல்மூட்டுகள், இடுப்பு எலும்பு மூட்டுகள் , முழங்கால் மூட்டுகள் , கணுக்கால் மூட்டுகள் ,பாத மூட்டுகள் தண்டுவட மூட்டுகள் என்று பலவகையான மூட்டுகள் உள்ளன .அனைத்து மூட்டுகளும் நல்ல முறையில் இயங்க வேண்டும் அப்பொழுதுதான் நமது உடல் நல்ல ஆரோக்கியமான நிலையில் இருக்கும். பொதுவாக மூட்டுகள் அசைவதை தடுப்பதற்கு சில காரணிகள் உள்ளன அதனை நாம் தெரிந்து கொள்வது மிக முக்கியம் . மூட்டுகள் அசையாமல் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் நாம் அன்றாடம் நமது வேலைகளை செய்வதற்கு நாம் உடலை சரியான முறையில்...

முகவாதம் ஏன் ஏற்படுகிறது? மழை மற்றும் குளிர்காலங்களில் முகவாதம் வராமல் தடுப்பது எப்படி?

Image
  முகவாதம் என்பது முகத்தில் உள்ள சதைகளுக்கு தூண்டுதலை எடுத்து வரும் (Facial Nerve)நரம்பு செயலிழந்து அந்த நரம்புடன் தொடர்புடைய சதைகள் செயலிழந்து முகமானது, பாதிக்கப்பட்ட பகுதிக்கு எதிர் புறம் சதைகள் இழுத்து கோணலாக இருப்பது முகவாதம் என்று அறியப்படுகிறது. இந்த முகவாதமானது பனிக்காலங்களிலும் மழைக்காலங்களிலும் பெரும்பாலும் அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடிய ஒரு பிரச்சனை .பொதுவாக பணி மற்றும் மழைக்காலங்களில் நமது காது பகுதியில் உள்ள ஜவ்வுகள் தொற்று காரணமாகவோ அல்லது அதிகப்படியான குளிர்ச்சி காரணமாகவோ தடித்து வீங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது .இவ்வாறு தடுத்து வீங்கிய ஜவ்வானது காது பகுதியில் உள்ள காது வழியாக வரக்கூடிய அந்த Facial nervr ஐ அழுத்தும் பொழுது முகவாதம் ஏற்பட்டு விடுகிறது.  இதனை எவ்வாறு தடுக்கலாம்? குறிப்பாக மழை மற்றும் பணி காலங்களில் நாம் நமது காது பகுதி நன்றாக மூடி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் .சூடான பானங்களை பருகலாம். குளிர்ச்சியான பானங்களையும் குளிர்ந்த நீரையும் பருகுவதை தவிர்க்க வேண்டும். மழை மற்றும் பனிக்காலங்களில் அடிக்கடி குளிர்ந்த நீரில் தலைக்கு குளிப்பதை தவிர...